வியாழன், 14 ஜனவரி, 2010

<>தமிழர் திருநாள் - பொங்கல்<>

<>எங்கள் சமுதாயம்<>

ஏழா யிரமாண்டு
திங்கள்போல் வாழ்ந்து
செங்கதிர்போல் ஒளிவீசும்
மங்காத போர்க்களத்தும்
மாளாத வீரர்படை
கங்குல் அகமென்றும்
காலைப் புறமென்றும்
பொங்கி விளையாடிப்
புகழேட்டிற் குடியேறித்
தங்கி நிலைத்துத்
தழைத்திருக்கும் காட்சிதனைக்
கண்காண வந்த
கலைவடிவே நித்திலமே!
பொங்கற்பால் பொங்கிப்
பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்! - கவியரசு கண்ணதாசன்.




இனிய தமிழ் நண்பர்களுக்கு



கடித்துத் தின்ன கரும்பில்லை

இனிப்புத் தின்ன எறும்பில்லை
மஞ்சள் பூச வழியில்லை
மாமன் மகளும் இங்கில்லை...
"சன்"னுக்குப் பொங்கல் அன்று
"சன்" டிவி தான் பொங்கல் இன்று
முகம் பார்த்த வாழ்த்துக்கள் அன்று
முகப்புத்தக வாழ்த்துக்களே இன்று..
இளமைக்கால பொங்கல் நினைவுகள்
இதயமெங்கும் வருடிட...

இனியத் தமிழ் நண்பர்களுக்கு என்
இதயப்பூர்வ பொங்கல் வாழ்த்துக்கள்...

-கீழைராஸா பாலையிலிருந்து....




நன்றி:நாம் தமிழர்

புதன், 13 ஜனவரி, 2010

தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கு சமர்ப்பணம்

ஈழம் – தலைநிமிர
தலைமகனை தந்த வரமே


ஒரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி -
உயிர் தந்த கோடியே;
முடங்கிப் போன இனத்திற்கு
முழக்கம் கொடுத்த -
உயிர்மூச்சே;
உலகின் எல்லை கோடு வரை
ஈழம் – தலைநிமிர
தலைமகனை தந்த வரமே;

தேசியம் கற்பிக்க
எங்கள் தேசியத் தலைவனை
பெற்றெடுத்த பேரே;
உன் மூடிய கண்களிலிருந்து
எந்த சுதந்திரம் -
எங்களுக்காய் பிறக்குமோ பிறக்கட்டும்;

விடுதலை காற்றின்

இலட்சிய மூச்சு – உன் மூச்சென

உலகம் அறியட்டும் -
அறியாமல் போகட்டும்;
உன் மரணமென்னும்
ஒற்றை வார்த்தையின்

இரட்டை அர்த்தம் -

உலகிற்கே புரியட்டும்!

-வித்யாசாகர்