புதன், 23 பிப்ரவரி, 2011

<>தேசத்தாயின் இறுதியஞ்சலி<>

தமிழ்த் தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.

பார்வதியம்மாளின் உடலத்திற்கு சிறீலங்கா இராணுவத்தினரினதும் புலனாய்வாளர்களினதும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் சரளமாக காட்டுமிராண்டிகள் நின்றபோதும், எம் தேசத்து உறவுகள் பலர் தேசத்தாயின் இறுதியஞ்சலியில் மனம்விட்டு கதறியழுது தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.



தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகள் நேற்று தீருவிலில் நடைபெற்றன. இறுதி நிகழ்வுகளில் பங்கெடுக்கும் மக்களை தடுக்கும் வகையிலான பல்வேறு கெடுபிடிகளை இராணுவமும் பொலிசாரும் இராணுவப் புலனாய்வினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
தீருவிலில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்விற்கு மருத்துவர் மயிலேறு பெருமாள் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உரையாற்றினர். அதன் போது தமிழீழ உணர்வாளர்களது உரைகளும் ஒலிபரப்பப்பட்டன. நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அச்சுறுத்தல்கள் காரணமாக மக்களின் பிரசன்னம் மிகக் குறைவாகக் காணப்பட்டிருந்தது.

தீருவில் நிகழ்வுகளை அடுத்து அம்மாளின் புகழுடல் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது வல்வெட்டித்துறையின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடிய மக்கள் இறுதி ஊர்வலத்தில் திரண்டனர்.

விற்பனை நிலையங்களைத் திறக்குமாறு அப்பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் முதல் புலனாய்வாளர்கள் வரை மிரட்டல் விடுத்த போதிலும் வர்த்தகர்கள் விற்பனை நிலையங்களைத் திறக்கவில்லை.

மக்களால் வீதிகளில் கட்டப்பட்ட கொடிகளை இராணுவத்தினர் அகற்றிய போது அதே கொடிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமே ஊர்வலத்தில் ஏந்திச் சென்றனர்.



வீடுகள் ஒவ்வொன்றிலும் இருந்து மக்கள் இறுதி வணக்கம் செலுத்தினர். புகழுடல் மயானத்தைச் சென்றடைந்ததும் இறுதிக் கிரியைகளை அடுத்து பார்வதி அம்மாளின் மைத்துனரான சங்கர நாராயணன் கொள்ளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக