ஈழம் – தலைநிமிர
தலைமகனை தந்த வரமே
ஒரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி -
உயிர் தந்த கோடியே;
முடங்கிப் போன இனத்திற்கு
முழக்கம் கொடுத்த -
உயிர்மூச்சே;
உலகின் எல்லை கோடு வரை
ஈழம் – தலைநிமிர
தலைமகனை தந்த வரமே;
தேசியம் கற்பிக்க
எங்கள் தேசியத் தலைவனை
பெற்றெடுத்த பேரே;
உன் மூடிய கண்களிலிருந்து
எந்த சுதந்திரம் -
எங்களுக்காய் பிறக்குமோ பிறக்கட்டும்;
விடுதலை காற்றின்
இலட்சிய மூச்சு – உன் மூச்சென
உலகம் அறியட்டும் -
அறியாமல் போகட்டும்;
உன் மரணமென்னும்
ஒற்றை வார்த்தையின்
இரட்டை அர்த்தம் -
உலகிற்கே புரியட்டும்!
-வித்யாசாகர்
புதன், 13 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக